துளிப்பாக்கள்
முற்றத்திலே கொத்தோடு மலர்
பக்கத்திலே மொட்டையாக
#விதவை
எண்ணில் அடங்கா மலர்
கண் எதிரே கனத்த மனசுடன்
#விதவை
விதை போட்டவனும் புதையுண்டான்
நன்றியுடன் மலர் மாலையாக
#புகைப்படத்தில்
சுட்டெரிக்கும் சூரியனையும்
விட்டு விடவில்லை
#காதல்
கள்ளிப் பாலுக்கு தப்பி உயிர்
கற்பழிப்புக்கு பலியானது
#பெண்
இதயம் அற்றவன் கட்டளைப்படி
எரித்தது மொட்டுக்களை
#துப்பாக்கி
வலி எடுத்து அம்மா அழுதாள்
வெளியே வந்ததும் நான் அழுதேன்
இவைதான் தொப்புள் கொடி வந்தமோ
#குழந்தை