சக்தியுனை

முழுதும் வெண்பாவிற் குரிய சீர்கள் அமைந்து ஐந்தாம் சீரில் நான்கு அடிகளுக்கும் ஒரே தனிச்சொல்லும் வருவது வெளி விருத்தம் எனப்படும். இதோ எனது வெளிவிருத்தம்.

கனிமரம் என்றே கதைத்து இருப்பேனே - சக்தியுனை
பனிமலர் என்றே பகர்ந்து கிடப்பேனே - சக்தியுனை
நனிபசும் பாலாய் நவின்றிடு வேனேநான் - சக்தியுனை
இனிவரும் காலம் இயற்றிக் கிடப்பேனே ! - சக்தியுனை

"சக்தியுனை " என்னும் தனிச்சொல் அணைத்து அடி இடத்தும் வருதல் காண்க. இதுவே வெளிவிருத்தம்.

எழுதியவர் : விவேக்பாரதி (18-Feb-15, 9:17 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 74

மேலே