பொருந்தாத சட்டைகள்

யாரோ யாருக்காகவோ
தைத்த சட்டைக்குள்
ஓசியாகக் கிடைத்ததென்ற ஒரே காரணத்தால்
பொருந்துமா பொருந்தாதா என்றும் யோசியாமல்
பிடிவாதமாய் தம்மை அதில் நுழைத்துக் கொண்டு
இந்த சட்டைதான் சிறந்தது.. இது என்னுது என்று
பிடிவாதமாய் மூச்சு திணறிப் பேசி
கை கால் நீட்டுகையில் எல்லாம்
கிழிந்தேதான் போனாலும் உடம்பெல்லாம்
வியர்வையிலேயே குளித்தாலும்
பொருந்தாத சட்டையை போட்டு திரிவது போல்
மாந்தர் தமக்கென்று ஓர் எண்ணம் கொள்ளாமல்
அசிங்கமாய்த் திரியலாமோ?
கேட்காமல் கேட்டு சிரித்தான் பித்தன்..!

எழுதியவர் : கருணா (20-Feb-15, 11:07 am)
பார்வை : 86

மேலே