இது கலிகாலம் நாம் வாழும் வாழ்க்கை

அரைகுறை ஆடையும் ...
அர்த்தமில்லாத ஆங்கிலமும்
என பெண்மை ஆனதோ...

பொழுதுபோக்கு தான் வாழ்க்கை
மதுவின் போக்குதான் நாட்கள்
என ஆண்மை ஆகியதோ ...

பிறந்த குழந்தையும்
செல்போன் பேசுது ...
இது என்ன
அறிவியல் வளர்ச்சியா ?

குடி குடியை கெடுக்கும் என
குடிக்க விற்கும் -மதுபாட்டில்
அரசின் நல்லாட்சியா ?

வியர்வை சிந்திய விவசாயி
ஏனோ
நொறுங்கி கிடக்கிறான்...

பணம் முழுங்கும் முதலைகள்
பசியில் - ஏழை
உயிரை குடிக்கிறான் ...

பத்தில் பதினொன்று என
என் நாட்கள் கூட நகருது ...

நான் பார்த்த தேசம்
இப்படி என நெஞ்சமும் உருகுது ...

மாற்றம் வருமோ...இல்லையோ
நான் அறியேன் ...

என் மரணம் மட்டும்
வரும் என
என் மனமும் சொன்னது...

ஆம் ..இது கலிகாலம் ...

‪#‎குமார்ஸ்‬....

எழுதியவர் : குமார்ஸ் (25-Feb-15, 11:26 pm)
பார்வை : 110

மேலே