பெண் இல்லாத உலகேது

உலகத்தையே பெண்ணாக,
தாயக, கன்னியாக
வழிபடுகின்ற மக்களின் மனதில்
அமிலம் தோய்த்த மயிலிறகாய்
வருடுவதற்கு ஒப்பான சொற்கள்.....

முதுகில் ஓட்டை சுமக்கின்ற
ஆமைபோல்
நினைவினில் வீட்டை சுமக்கின்ற
குடும்பத்தலைவிகள் ...

தொல்லையாய்
பிள்ளைகள் இருந்தாலும்
எல்லைமீறிய
கிள்ளை மொழியால்
அன்பினை அடுக்காய்
பொழிகின்ற அன்னைகள்....

குடும்ப விளக்காம்- தாய்
இறந்தபின்பும்
குடிகாரத்தந்தை,
குடிகெடுக்கும் சுற்றம்
அடுக்கடுக்காய் தொல்லைகள் வரினும்
அரணாக இருக்கின்றார்கள்
தரமான தம்பிகளை உருவாக்கும்
தமக்கைகள். . .

கணவனின் ஆடிபிம்பமாய்
கணம் தரும் ஓய்வு அரியது
குணங்களில் கண்ணகியன் பதிலியாய்
வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவிகள் ...

ஆணின் துணையாய்
அவன் ஆசைகளின் பதிலியாய்
அவன் குரலை ஒலிக்கின்ற பாடலாய்
முன்னேற்றத்தின் படிக்கட்டாய்
வெற்றிகளின் கூடலாய்....
சீதை நலாயெனி துரோபதி என
ஆண் கொடுக்கும் சுக்தந்திரத்தில்
அர்த்தநாரி கோலத்துடன் ஆலயத்தில்...

நான் பெண்ணோடு என் இருப்பை
உணரும் தருணத்தில்
என் பேனா இப்படித்தான் எழுதுகிறது.....,

ஆண் ஆதிக்க உலகத்தில்
ஆணின் பிரதிபலிப்பாக
பெண்கள் இல்லாத உலகம் ஏது.....,,!

எழுதியவர் : (26-Feb-15, 1:10 pm)
சேர்த்தது : vinothkrish87
பார்வை : 80

மேலே