அன்பே

இளையுதிர்க்காலம் முடிந்து
பனிக்காலம் வந்து விட
அன்பே ........
இன்னும் நீ ஏன் வரவில்லை

ஜன்னல் திறந்து வழி மேல்
விழி வைக்கிறேன்
அன்பே ............
இதயத்தில் உன் நினைவுகள்
நிறைந்திருப்பது போல்
பாதையும் பனியால் நிறையக்
கண்டேன்

பொழியும் பனியின் குளிரும்
வீட்டு நெருப்பின் சூடும்
வெவ்வேறாய் உணரவில்லை
அன்பே ............
இரண்டும் கலந்து தாக்கியது
போல் ஒரு பெரும் அவஸ்தை

ஏன் நீ வருவேன் எனச் சென்றாய்
உன் நினைவுகளுடன் வாழ்வதில்
கடினம் இருக்கவில்லை
அன்பே .........
உனக்காய் காத்திருப்பது என
உயிரை அணு அணுவாய்
கொள்கிறதே

உன் முகம் காண உயிரை
பனியில் உறைய வைத்து
காத்திருக்கிறேன்
அன்பே ................
உன் கைகளின் வெப்பம்
கொண்டு என உயிரை மீண்டும்
உயிர்ப்பிக்க வருவாய் எனும்
நம்பிக்கையில் ...

எழுதியவர் : fasrina (28-Feb-15, 2:09 pm)
Tanglish : annpae
பார்வை : 131

மேலே