வாடிக்கையாய் வேடிக்கை
மின்னல்கள் கீறி
மேகங்கள் உடைவது போல்
எண்ணங்களை கீறி
உன் நினைவெனும்
கவிதைகள் உடைவதென்ன..
உடைந்த கவிதைகளெல்லாம்
காகித காட்டினில்
காற்றின் கயிற்றில்
வார்த்தைகளாய் தொங்குவதென்ன..
தொங்கிய வார்த்தைகளெல்லாம்
வாசனை மாறாமல்
வாசகரால் வாடிக்கையாய்
வேடிக்கை பார்ப்பதென்ன..