குடிமகனின் கூத்தொன்று

குடிமகனின் கூத்தொன்று..!

கை,கண்,காது கவனத்தில் வைத்து
காலுக்கும் வேலைகொடுத்து
மூன்று சக்கரவாகனத்தில்
முன்னோட்டிச் செல்லுமவன்

முதுகுப்புறம் எழுதிவைப்பான்
முன்னோரின் பழமொழியுடன்
முகம்சுழித்துப் பேசாதொரு
முக்கோணத்தின் பயன்பாட்டை..!
 
உனக்குமெனக்கும் மீட்டரென்று
ஊருக்கெல்லாம் மேட்டரென்று
கூலிவாங்கி க்வாட்டர்விட்டு
கோபுரமாய் சரிந்திடுவான்..!

கோலம்போட்ட குடிமகனாய்..!

-|-Rocking Jack -|- 

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (7-Mar-15, 8:21 pm)
பார்வை : 99

மேலே