கல்யாண நாள் வாழ்த்துக்கள்

மனைவி : என்னங்க... இண்டைக்கு என்ன நாள் என்று தெரியுமா?

கணவன் : இல்லையே... அப்பிடி என்ன விஷேசம்...

மனைவி : உங்களுக்கு எது தான் நினைவில இருந்திருக்கு...?

கணவன் : சரி சரி விடு.... நல்ல விசயமாக இருந்தால் கண்டிப்பாக நினைவில இருக்கும்... மற்றப்படி இருக்காது...

மனைவி : இண்டைக்கு எங்க கல்யாண நாள்... இது கூடவா ஞாபகம் இல்லை... இண்டைக்கு ஒரு கோழி அடிச்சு குழம்பு வைப்பமா...

கணவன் : அதான்மா முன்னாடியே சொல்லிட்டேன்ல... நாம பண்ணின தப்புக்கு அதுக்கேன்மா தண்டணை கொடுக்கணும்....

மனைவி : என்னது....

கணவன் : ஒன்றுமில்லை........ கல்யாண நாள் வாழ்த்துக்கள் சொன்னேன்மா......

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (7-Mar-15, 10:40 pm)
பார்வை : 304

சிறந்த நகைச்சுவைகள்

மேலே