மரித்து போகும் என் ஆசை

பாலியல் பலாத்காரத்தில்
பலியான பெண்களையும் குழந்தைகளையும்
எண்ணிப்பார்க்கும் போது...
சாதிக்க நினைக்கும் பெண்களின் கனவுகள்
கல்யாணசந்தையில் பணம் படைத்தவர்கள்
கவுரவத்தில்
கலைந்து போகும் போது...
மகளிர் தினம் கொண்டாட வேண்டும்
என்ற என் ஆசை மரித்து போகிறதே!!