நினைப்பதெல்லாம்

என் கனவுகளுக்குள்
ஏனோ
தூக்கமே முகமூடியாய்...

ஆழ்மனதில் சில ஊர்வலங்கள்
பெண்ணியக்கொடிகளுடன்.....

இறைவன்
கூடு கட்டினான்
அதற்கேனும் தகுதியுடையவனாய் ...

சமூகத்தின் நிழல் மறைத்த
எனதுருவம்
மாற விரும்பாதது....

ஓர் நட்பு ஒன்றின்
இளஞ்சிவப்பு விரலில்
இப்போது
பஞ்சு மெத்தை ....

இருந்தேன் ஆனால்
எப்போதும்
இருந்தேனில்லை.....

இரவின் பாதுகாப்பு
ரகசிய போர்வை
கோடையிலும் ....

மழை காணா வானம்
என் காதல் பிரிந்த சோகமே
வெறுப்பாய்.....

கண்மூடுகின்றேன்
யாரோ நான்
என்னிலும் மறதி
போதி வட்டமாய்....

புதியதொரு சிந்தனை
இன்றும்
விடியவேயில்லை......

மறக்கவேயில்லை பிஞ்சுமுகம்
நெஞ்சுக்குள்
மரணமாய் விழுந்துவிட்டது.....

எழுதியவர் : புலமி (10-Mar-15, 1:28 am)
Tanglish : ninaippathellaam
பார்வை : 104

மேலே