உள்ளிருக்கும் நினைவுகள்

சில நொடி
தலை சாய்ந்து
கண் மூடும்போது
அனுமதியின்றி
உள் நுழைகிறது - உன்
நினைவுகள்..

பூட்டி வைத்த
கனவுக்குள்
புதுக் கவிதை - உன்
நினைவுகள்..

பார்த்து பார்த்து
ஓய்ந்து போன
கண்ணுக்குள்
தேங்கி நிற்பது - உன்
நினைவுகள்..

காற்றில் தொலைத்த
கண்ணீர் எல்லாம்
கடைசியாய்
ஒட்டி வைத்தத்
தழும்புகள் - உன்
நினைவுகள்..

உலர்ந்து போன
இதயத்தின் ஓரத்தில்
இன்னமும் கொஞ்சம்
ஈரம் கசிகிறது
எனில் உள் இருப்பது - உன்
நினைவுகள் மட்டும் தான்..!

எழுதியவர் : இந்திரா (10-Mar-15, 1:35 pm)
பார்வை : 140

மேலே