சொல்லாத காதல்

எனது காதலை
கவி கனிந்த
காகிதம் வழியாகக் கூட
உன்னிடம் என்னால்
கூற முடியவில்லை...
தினம் என் மீது விழும்
உன் பார்வை பறிபோய்விடுமோ
என்ற பயம் எனக்கு...
உண்மைதான் என் காதலே
உன் பார்வையில்தான்
இன்றுவரை வாழ்கிறது
என் காதல்...
நாளை முதல்
சிலையில்லாப் பாறையாவேன்
சிறகில்லாப் பறவையாவேன்
சருகில்லாப் பாதையாவேன்
இன்று கல்லூரியின்
கடைசி நாள்....
செ.மணி