கனவே கலைந்து போ பாகம்-4 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்

பிரசாத் நந்தினியின் புது வீட்டில் இரவு தங்கியிருந்தான். இதற்கு முன் வீடிருந்த இடம் சுடுகாடாக இருந்ததாம்......

................................................................................................................................................................................................
இரவு இரண்டு மணியிருக்கும்...

ச்சர................ ச்சர... ச்சர........................ ச்சர..................... ச்சர.......

காற்றை எதிர்த்து நடந்து வரும்போது துணிகள் படபடக்கும் சப்தமா? துணியை எதிர்த்து வீசும்போது காற்று படபடக்கும் சப்தமா? காற்றும் வீசவில்லை; துணியும் இல்லையே? என்ன விசித்திர சப்தம்..????

எழுந்து அமர்ந்தான்..

இரவு விளக்கின் நீல வெளிச்சம் அந்த அறையின் கால்வாசி இருட்டைக் கூட உள் வாங்கவில்லை. யாரோ தாக்கத் தயாராய் இருப்பதைப் போல காத்திருந்தது இருட்டு..... வெளியே பார்த்தான்......

காலையில் அழகாய்த் தெரிந்த வீடு இப்போது அமானுஷ்யமாய்த் தெரிந்தது.............

டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டான்.

எங்கிருந்தோ நாய் ஊளையிட்டது... ஊ... ........ ஊ...!

அறையை விட்டு டாய்லெட் பக்கமாகப் போகையில்....

சின்னப் புகையாக....... மிதந்தபடி.....

வெண்ணிற உருவம்.... !

கண்களை கசக்கி தலையை அழுத்தி விட்டுப் பார்த்தான்...!

வெண்ணிற உருவம்.... !
வெண்ணிற உருவம் அப்படியே மிதந்து நகர்ந்தது.... பால்கனி பக்கமாக.....!

“ஹக்..”
பிரசாத் உறைந்தான்...

“யா.....யாரது? “
“நான்தான் நந்தினி! ”
பிரசாத் திடுக்கிட்டான்....!?

இது பிரமையா? நிஜமா?

டாக்டர் மேகலா எழுதிக் கொடுத்த மாத்திரை சட்டை பாக்கெட்டில்தான் இருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டால் உண்மை தெரிந்து விடும்...!

“ஓடுடா பிரசாத்... மாத்திரையை முழுங்கு! ” பிரசாத்தின் உள்மனம் அரற்றியது!

கால்கள் நகர்ந்தால்தானே?

வெண்ணிற உருவத்தின் உடல் குலுங்கியது. அழுகிறதோ? “என் உடம்புல ஒரு கெட்ட ஆவி புகுந்துட்டு என்னை விரட்டி விட்டுடுச்சி.... ”

“பிரசாத்... மாத்திரையைப் போட்டுத் தொலைடா.....! ”

“ நீ..நீ...சொ...சொல்றது உ...உ...உண்மையா? ”

“ வேணும்னா அவளைக் கேட்டுப் பாரு. சமீபத்துல அவ ஏதாவது விபத்துல மயிரிழைல தப்பிச்சாளான்னு கேளு.. அந்த விபத்துல நான் செத்துட்டேன்.. அவ வந்துட்டா.. என் உடம்புல.. ....! ”

பிரசாத் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெண்ணிற உருவம் மறைந்தது !

திரும்ப ச்சர... ச்சர...சத்தம்..!

பூஜையறைக்குள் சமாதி தெரிந்தது....! மண் விளக்கின் ஒளியில் சவப்பெட்டி திறந்து நந்தினி உள்ளே போனாள்.....!

அறைக்குள் ஓடிப் போய் மாத்திரையைத் தேடி கையிலெடுத்தான்.. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது..................

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது.............பார்த்தபோது.............

ந...நந்தினி தெருவில் நடந்து கொண்டிருந்தாள். பால்கனியில் இருந்தவள் தெருவில் எப்படி? அதுவும் கருப்பு உடையில்....! தெரு விளக்கில் அந்த சுரிதார் டிசைனைப் பார்த்தான். இந்த சுரிதார் டிசைன் அவன் நினைவில் இல்லையே? மனப்பிரமைக்கு நிஜம் தானே அடிப்படை? அவன் காணாதது காட்சியாக முடியாதே????

ஆபிசில் பத்திரிக்கை முகப்புக்காக கம்யூட்டர் டிசைன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிரசாத் வேறு வேலையில் இருந்த போது கண்ணில் பதிந்திருக்குமோ??

ஓடிப் போய் வீட்டுத் தாழ்ப்பாளை பார்த்தான். உள்பக்கம் பூட்டியிருந்தது. அவன்தானே பூட்டினான்? திறந்தான்; அப்பா! என்ன இறுக்கமாக இருக்கிறது! “சளக்” என்ற சத்தத்தோடு தாள் திறந்தது.

தெருவில் ஒருவருமில்லை!!!

குழம்பினான்.

மணி சரியாக இரண்டு பதினெட்டு.

மாத்திரையை முழுங்கினான்.

மீதி இரவு முழுதும் திக்...திக்...திக்...!

அதிகாலை ஐந்து மணி வாக்கில் தன்னை அறியாமல் தூங்கி விட்டான். நந்தினியிடம் வீட்டுச்சாவி தர வேண்டுமே? அவதி அவதியாக எழுந்த போது மணி ஏழு. அப்படியே பைக்கை உதைத்துக் கிளம்பினான் நந்தினியின் அலுவலகத்துக்கு! ஒன்பது நிமிடங்களில் சேர்ந்து விட்டான்!

நல்ல வேளை, நந்தினி அலுவலகத்தில்தான் இருந்தாள். அதே இனிமையான அழகிய நந்தினி!

சே! இரவில் என்ன ஒரு மனப்பிரமை?

நந்தினி அவனை அன்போடு வரவேற்றாள். ஏன் லேட் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. வீடு வசதியாக இருந்ததா என்றாள். இரவில் நன்றாகத் தூங்கினீர்களா என்றாள்.

நந்தினி தனது அறையிலேயே பிரசாத்தை குளித்து விட்டு வரச் சொன்னாள். படப்பிடிப்புக்கு நேரமிருக்கிறதாம். தன்னோடு சாப்பிடச் சொன்னாள்.

இவள் செத்து விட்டாளா? இவள் கெட்ட ஆவியா?
பிரசாத்துக்கு இப்போது சிரிப்பு வந்தது!

இரவுப் பணி முடிந்தபிறகு ரிசப்ஷனில் வந்து போனவர்களின் க்ளோஸ் சர்க்குயூட் காமிரா பதிவுகளை கம்யூட்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். பிரசாத்தின் கண்கள் எதேச்சையாக அந்த பக்கம் பார்த்தன.

காமிரா பதிவுகளோடு நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

இரவு மணி இரண்டு ஐந்திலிருந்து இரண்டு இருபத்தொன்பது வரை.......................

பதிவையே காணோம்...!!!


முகம் வெளுத்த பிரசாத் தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டான்.

இருவரும் காண்டீன் சென்றனர்.

“ நந்தினி, சமீபத்தில உங்களுக்கு ஏதாவது விபத்து நடந்ததா? ” பிரசாத் சாதாரணமாய் கேட்பது போல் கேட்டான்.

“ஆமா.. ரெண்டு மாசம் முன்னாடி ஒரு லாரி இடிக்கிற மாதிரி வந்தான்.. நல்ல வேளை, பிரேக் அடிச்சிட்டான்! ” இட்லியை பிட்டு சாம்பாரில் மூழ்கடித்துக் கொண்டே சொன்னாள் நந்தினி.

“அந்த வீடு எப்ப கிடைச்சது? ”

“அதுவும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான்.. ”

அடுத்து என்ன கேட்பது?

அவளே தொடர்ந்தாள், “முன்னே நான்வெஜ் சாப்பிட மாட்டேன், அடிக்கடி கோயிலுக்குப் போவேன். இப்ப கொஞ்சம் மாறிட்டேன்”

“ஏன்? ”

“யாருக்குத் தெரியும்? அந்த ரத்தத்தை எடுங்க! ” விளையாட்டாகக் கை காட்டினாள், தர்பூசணி ஜூஸை!

விட்டால் போதுமென்று ஓடி வந்தான் பிரசாத்!

அப்படியே ஓடி விட்டிருந்தால்............ !!! பிரசினை இருந்திருக்காது!.

தொடரும்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Mar-15, 2:44 pm)
பார்வை : 278

சிறந்த கவிதைகள்

மேலே