கற்பனைக் காட்சிகள்

மானுடம் கட்டஇயலா
மதில்சுவர்களாய்,
பறந்து செல்லும்
வெண்புரவிகளாய்,
நகர்ந்து போகும்
மதயானைக் கூட்டங்களாய்,
ஓங்கி வளர்ந்த
மரங்களாய்,
பூத்துக்குலுங்கும்
சோலைகளாய்,
பாய்ந்து ஓடும்
நதிகளாய்,
சாய்ந்து ஆடும்
தேர்களாய் ,
கற்பனைக்கு எட்டா
காட்சிகளாய்,
கலவரம் உண்டாக்கும்
சில உருவங்களாய்,
வரையறுக்கப்படா
வடிவங்களாய் ,
விந்தைகள் பல
நிகழ்த்தும் கூடங்களாய்..
மாரி வழங்கும்
வள்ளலாய் ...
மண் உயிர்களுக்கு
ஆறுதலாய்.....
அடித்து துவைத்த துணிகளின்
அழுக்கு நுரைகளாய்....
கார்நிறங்கொண்ட
கன்னியாய் ......
என் கற்பனையில்
வந்தகாட்சிகள்
இதோ கவியில் தர
ஒரு வாய்ப்பாய்............


********************** இரா.சுடர்விழி*********************

எழுதியவர் : இரா.சுடர்விழி (18-Mar-15, 1:30 pm)
பார்வை : 1026

மேலே