நீ விட்டு சென்ற காதல் பாதையில் வாழ்ந்துகொண்டு இருப்பேன் 555

உயிரானவளே...
என்னைவிட்டு நீ
விடைபெற்றாய் சந்தோசமாக...
நானோ சந்தோசமின்றி
உன் நினைவில்...
நான் இருக்கிறேன்
முழுமையாக...
நீ சொந்தம் கொண்டாடிய
என் மேனியில் கீறல் ஏதும் இன்றி...
நீ என்னைவிட்டு சென்ற
அந்த காதல் பாதையில்...
உன் நினைவுகள் எல்லாம்
என்னுடன் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது...
என் விழியில் வந்த காதலை
உன்னிடம் நிஜத்தில் கண்டேன்...
என் நினைவுகள் உனக்கு
வரவில்லை...
என்னுடன் நீ இருந்த அந்த
மாலைநேர கதிரவன்...
தென்றல் கூடவா
உனக்கு வரவில்லை...
என்றேனும் நினைவுகள்
உனக்கு வந்தால்...
வந்து பார் நீ விட்டு சென்ற
காதல் பாதையில்...
வாழ்ந்துகொண்டு இருப்பேன்
உன் நினைவுகளோடு...
நான்.....