சட்டென சமாதனமாவாய்

காதலிக்க மட்டும்
தெரிந்த எனக்கு
காதலை கற்றுக் கொடுத்தாய்

மூன்றாம் போரென
மூளும் மோதலில் கூட
ஆரோக்கியத்தை அள்ளி வீசுவாய்

தீவிரவாதத்தை
தெறிக்க விட்டு
சட்டென சமாதனமாவாய் .

என் நிழலை
மோதும் தென்றலையும்
எதிரிகள் பட்டியலில் இணைத்திடுவாய்..

எதிர்பாரா நேரத்தில்
நெற்றியில் ஒற்றை முத்தமிட்டு
மூச்சை திணறச் செய்திடுவாய் ..

எழுதியவர் : பிரியாராம் (21-Mar-15, 3:52 pm)
பார்வை : 111

மேலே