சீச்சி சீச்சி சீச்சி
உறங்குங்கள் உறங்குங்கள்
தூங்குங்கள் தூங்குங்கள்
குறட்டை குறட்டை குறட்டை
என் காது காது கிழிறது.
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சீச்சி சீச்சி சீச்சி சீச்சி
ஏ நாயே என்ன வேண்டும்
தூக்கமாம் தூக்கம்.
என்னா பாக்குற நாயே.?
ஆகாசம் ஆகாசம் ஆகாசம்
தொடணுமாம் ஆனா
நேரமில்லையாம்.
தன்னனே தன்னனே
இந்த எதித்த வீட்டுக்காரன் நாள
சாகப் போகுறான் நாயே
சாகப் போகுறான்.
டமால் என்று முதுகில்
ஒரு அடி விழுகிறது.
மயங்கி விழுகிறான்
பைத்தியக்காரன்.
சலம்பல் சத்தம் கேட்டு
பால்கனியில் சில தலைகள்.
அவனைப் பிடித்துச் செல்கிறார்கள்
அந்தப் போலீஸ்காரர்கள்.
விடிந்தது..
படுக்கையிலிருந்து
எந்திரிக்கவில்லை.
இறந்திருந்தார்
எதிர்வீட்டுக்காரர்.
--கனா காண்பவன்