கோட்டோவிய மழலைகள்

உண்டாகி மூன்று மாதத்தில்
உண்ணாது இருக்கும் போது
உயிருக்கு புத்துணர்ச்சி தந்திடுவாய்...
உன்னத நிலையாய் நீயேபாரில்
எனக்கு தாய்மைபேரைத் தந்திடுவாய்

பத்துத் திங்கள் கழிந்ததும்
மடியில் வந்து தவழ்ந்திடுவாய்
மழலையாய் மற்றற்ற மகிழ்வில்
என்னை ஆழ்த்திடுவாய் ..

கண்ணே உன்னைக் கொஞ்சிட- கன்னித்
தமிழ் வார்த்தை போதவில்லை
தொட்டுத் தடவி அணைக்கையிலும்
தீரா ஆசை, அகல மறுக்கிறது ..

அம்மாவென்று அழைத்ததும் அகிலம்
கையில் வந்ததடி ஆனந்த,ராகம்
காதில் கேட்டதடி ,நீ அழுகையில்
பசியிலும் பால் சுரக்குதடி ...

உன் சிரிப்பில் நிலா தேயுதடி
உன் பேச்சில் சூரியன் கரையுதடி
உன் நடையில் அன்னம் தோற்றதடி
பின்னழகில் எழிலும் கொஞ்சுதடி ..

உன்பிஞ்சு பாதம் ஏந்திடவே
என்னெஞ்சம் ஏங்கி கிடக்குமடி
உன் கன்னக்குழியை தீண்டிடவே
என்னிதழும் தவம் கிடக்குமடி ..

கண்ணே உந்தன் புன்னகையால்
கவலை எல்லாம் மறக்குதடி -மகிழ்ச்சி
காட்டறாய் என்னைச் சூழுதடி ..

எழுதியவர் : ஏந்திழை (24-Mar-15, 2:09 pm)
சேர்த்தது : ஏந்திழை
பார்வை : 165

மேலே