அரைகுறைகள் எல்லாம் அழகல்ல

அரைகுறைகள் எல்லாம் அழகல்ல

அரைகுறையாக திறந்த வாசல்
அங்கே தென்றல் வரத் தயங்கியது
அரைகுறையாக வீசிய தென்றல்
மலர்கள் முழுதாக மலரவில்லை
அரைகுறையாக திறந்த மனவாசல்
காதலுக்கு உள்ளே வர விருப்பமில்லை
அரைகுறையாக இருந்தாலும்
வானத்தில் நிலவு அழகுதான் ஆனால்
அரைகுறைகள் எல்லாம் அழகல்ல
உலகில்.

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-15, 9:55 am)
பார்வை : 123

மேலே