நானெழுதிய கவிதை

எனக்கும் இந்த கவிதைக்கும்
எந்த பேதமுமில்லை ..
என்னை போலவே இருக்கும் ,,
பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..
தன்னை எழுதி
தொலைந்து போக வைத்த
கவிஞனை தேடி அலையும்
ஓர் கவிதையின் கதை.....
------------------------------------- **------------------------------------
மறதி வரம் தான்
அவள் ஞாபகம் வராத வரை ...
------------------------------------- **------------------------------------
நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,
கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய
பாடலின்
"முதல் வரியாக "........
------------------------------------- **------------------------------------
கவலைபடாதே
உன்னை பற்றியும் , என்னை பற்றியும்
இல்லை இந்த வரிகள் ...
அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்
இங்கே நீயும், நானும்
அவள், அவனாய்
------------------------------------- **------------------------------------
இயங்கும் படிக்கட்டில் (escalator )
நம் முதல் பயணத்தில்
நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்
தடுமாறி போனேன் நான்..
இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....
------------------------------------- **------------------------------------
ஓர் இரவு உணவு வேளையில்
உனக்காக சைவமான நான்,
இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....
------------------------------------- **------------------------------------
உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,
நீ காதலை வெளிபடுத்திய விதம்
அழகாய் இருந்தது உன்னையும் விட ......
------------------------------------- **------------------------------------
காதல்
சொல்வதில் , எற்றுகொள்வதில்
மட்டுமில்லை
விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக ...
நான் விரும்பியும் விலகிசென்றேன்
நான் விரும்பியே விலகிசென்றேன் ...
------------------------------------- **------------------------------------
ஒரு வேளை நீ கேட்டதும்,,
அந்த கவிதையை
எழுதி கொடுதிருந்தால்,, இல்லை
விலகி சென்றவுடன்
உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "
எழுதியதை கொடுத்திருந்தால்...
அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்
நம் வாழ்கை ஆகி இருக்குமோ !!
------------------------------------- **------------------------------------
அவன் எழுதாமல் தொலைத்த கவிதை அது
எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை நீ
அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்
------------------------------------- **------------------------------------
இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்
துரு ஏறாமல் இருக்கிறது
"அந்த கவிதை "
இல்லை இல்லை
இன்னுமும் என் கவிதைப் பட்டறையை
துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது
"அந்த கவிதை "
------------------------------------- **------------------------------------
நீ வந்த சுவடுமில்லை,
போன வடுவுமில்லை ,,
வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது
------------------------------------- **------------------------------------
நாம் விலகியவுடன்,
இல்லவே இல்லை
நான் விலகியதும்,
வளரவும் இல்லை,
சிதையவும் இல்லை ,
புதையவும் இல்லை ,
அப்படியே இருக்கிறது ....உன் மீதான
"என் காதல் கரு "
------------------------------------- **------------------------------------
உன் திருமண அழைப்பிதழாய்
எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....
பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்
அவளாய் இருந்து
நீயாய்
மாற தயாரகிவிட்டாய் என ,....
------------------------------------- **------------------------------------
உன் திருமணத்திற்கு பின்
நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்
நலம் விசாரித்தாய்
என்னை பற்றி ..
முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,
பின்பு பிடிக்காமல் போன
அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...
------------------------------------- **------------------------------------
இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்
படிக்கச் நேரலாம்,
உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...
என்னிடம்
மன்னிப்பும் கேட்டு விடு,,
என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,
நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...
------------------------------------------------------ **--------------------------------------
எனக்கும் புரியும்
இனி நீ அவளாகமுடியது
நான் அவனாகமுடியாது ....
அனால் , நான் அவனோடுதான் ....
உன் ஞாபகம் "மறந்து போகும் " வரை , அல்லது
உன் ஞாபகம் "மறுத்து போகும் " வரை ,அல்லது
உன் ஞாபகம் "மரத்து போகும் " வரை ..
------------------------------------- **------------------------------------
இதுதான்,,
நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....
------------------------------------- **------------------------------------
கருவில் கலைந்த குழத்தை போல் தான்
என் காதல்..மீள்வது கடினம்தான்,
நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்
------------------------------------- **------------------------------------
நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,
அவன் மீண்டு கொண்டிருக்கும்போது
நீ மீண்டும் வந்திராதே இப்பிடி
எனக்கு நீ அனுப்பிய பாடலின்
"முதல் வரியாக "....