நாட்டாமைப் பிள்ளை

நாலு காசு திருடியதாம்
.......நாட்டாமைப் பிள்ளை;

நாலு பேர்க்கு பங்கு தந்தால்
.......நல்ல பிள்ளையாம்..!

தற்கொலைக்குத் தூண்டியது
.......கச்சிப் பணிக்கு சரியாச்சு;

கொன்றால் கொன்றால் வந்த பாவம்
.......தின்றால் தின்றால் தீர்ந்திடுச்சு ..!

பல காலம் படுத்திருந்த
.......நீதித் தேவதை....

பல் விளக்க எழுந்ததுதான்
......பெரிய சாதனை....!

திரும்ப- இது.....

கோழித்தூக்கம் போடுமோ?
......கும்பகர்ணன் ஆகுமோ?

ஏழரைகள் வீழுமோ?
.......“எங்கம்மா” சொல்லுமோ?

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-Apr-15, 9:24 pm)
பார்வை : 129

மேலே