துக்கப்படாமல் கவிதை
*
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு சிரிப்புத் துணுக்குகள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு காதல் கவிதைகள்
அனுப்புகிறேன்.
நீ துக்கப்படாமல் இருக்கத்தான்
இனிமையான இசைப் பாடல்கள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
நேரில் சந்தித்து
அன்பை பறிமாறிக் கொள்கிறேன்
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
திருமண முயற்சியில்
தீவிரமாக இறங்கியிருக்கிறேன்
நீயோ…?
அக்காவுக்கு கல்யாணமான
பிறகு தான் நமக்கென்று…
திடீரென குண்டைத் தூக்கித்
மார்பில் போட்டுவிட்டாயே..?
*