மழை பெய்த நேற்றையப் பொழுதில்-4

நம் காதலும்
என் கவிதைகளும்
மகரந்தங்கள் ஏந்திய
மணித்தியாலங்களில்
பிறந்தவை.

நம் காதலும்
உன் முத்தமும்
குருதி கொதித்து
உறையும் கணங்களில்
பிறந்தவை.

நம் காதலும்
நின் வெட்கமும்
சூரியன் தொலையும்
நிலாப் பொழுதில்
பிறந்தவை.

நம் காதலும்
உன் நகக்கீறலும்
நள்ளிரவு கேட்க
நம் முனகல் இராகத்தில்
பிறந்தவை.

நம் காதலும்
என் விடைபெறலும்
மரணப்பயிற்சி நேரங்களாய்
பிறந்தவை.

நம் காதலும்
நகரா உன் நோக்குதலும்
சிற்பியின் வேலைநேரங்களுக்காய்
பிறந்தவை.

ஒவ்வொரு முறையும்
புதிதாய்ப் பிறக்கும்
நம் காதல்...

உலகத்து எல்லா
நொடிகளுக்கும்
உயிர் தருகிறது.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (9-Apr-15, 12:54 am)
பார்வை : 74

மேலே