எழில்மிகு எங்கள் கிராமம்

எழில்மிகு எங்கள் கிராமம்....

நெடுவயல் நிறையக் கொண்ட
நீண்டதொரு கிராமம் காணீர்
பனித்துளி படர்ந் திருக்கும்
பசும்பயிர் தலைப் புரத்தில்
ஏழையின் வாழ்க்கைப் போலே
எண்ணற்ற பொத்தல் கலோடு
எழுந்திடும் மேலும் கீழும் - நீரை
இறைத்திட வேண்டி சாலே!

நாற்றங் கால்முற் றியதால்
நாளரிந்து நேரம் பார்த்து
இளையவளும் முதிவ ளுமாய்
எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து
முதுகினை வலைத் ததுபோல்
முழங்கையால் முட்டுத் தந்து
கையிலே நாத்தை வாங்கி - எம்மக்கள்
கழனியில் நடவு செய்வர்!

வயலின் அழகைத் தாண்டி
சற்றே நடந்து போனால்,
வாட்டமாய் வளர்ந்து நிற்கும்
வலையாத கம்பும் வரகும்,
சந்திலாப் பெரண்டை வேலி
சாட்டை போல்படர்ந் திருக்கும் - அதனுள்
தங்கிடும் குருவிகள் பலவும்
தன்னினம் பெருகு தர்க்கே!

குட்டையில் தவளை ஒன்று
குதித்திடக் கண்டேன் ஆங்கே
குறவை மீன்பிடிக்க வேண்டி
குழந்தைகள் குதித்து தாண்டி
கும்மாள மடித்தக் காட்சி
கோடிகள் கொடுத் திட்டாலும் - கானக்
கிடைப்ப தர்க்கரி தேயாகும்!

பார்த்திபன்.ப
21/03/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (10-Apr-15, 11:44 am)
சேர்த்தது : P PARTHIBAN
பார்வை : 192

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே