அம்மா

என் குரல் ஒலிக்கும் முன்னே
என் விழிகள் ஒளி காணும் முன்னே
என் மீது அன்புகொண்டவள் ....

என் விழி திறக்கும் முன்னே
நான் மொழி அறியும் முன்னே
வாழ்க்கை பாதையை
தொடங்கி வைத்தவள் ....

உன் இரவு தூக்கம்
நான் கலைக்க ....
என் கால்கள் தான்
உன்னை உதைக்க ....
இன்பமாய் ஏற்றவள்..

அழகிய மொழி தந்தவள்
சீரிய நெறி சொன்னவள்

அன்பில் பாரியவள்
பண்பின் தரியவள் ...

வஞ்சகமில்ல பேதையவள்
படிக்காத மேதையவள் ....

எழுதியவர் : அர்ஷத் (17-Apr-15, 8:15 am)
Tanglish : amma
பார்வை : 67

மேலே