பச்சை
வளமான ஊரில்தான்
வாழ்க்கைப்பட்டு இருக்கிறாய்
ஆலப்புழையில்
வீட்டு வாசற்படியில்
தண்ணீர் ஓடுமாமே,
எல்லாவற்றையும் கழுவி
சுத்தமாய் வைத்துக்கொள்ளலாம்.
சுடுமணல் ஓடுகிற ஆற்றில்
நான் போய்
எதைக் கழுவ முடியும்?
எங்கு பார்த்தாலும் பச்சை எனில்
உனக்கு வேறெந்த நினைவும் வராது.
மொட்டைத் தென்னைகளையே
பார்க்கும் எனக்குத்தான்
இளநீர்க்காலங்கள் நினைவிலாடுகின்றன.