தங்க மங்கையே

கல்யாண் ஜுவல்லரி
கஸானா ஜுவல்லரி
லலிதா ஜுவல்லரி
ஜோய் ஆலுக்காஸ்
இவற்றிற்கும்
இவற்றைப் போல
இன்னபிறவற்றிற்கும்
தலைமையகமாக
நீ வசிக்கும்
உனது வீடு !

====================

எல்லாருக்கும்
தங்கத்தின் மீது
ஆசை !
தங்கத்திற்கு
உனது
அங்கத்தின் மீது
ஆசை !

====================

கட்டிய சேலையோடு
நீ
வந்தாலும்
எனக்கு
55 kg தங்கம்
வரதட்சணைதான் !

====================

தங்கம்
என்னவெல்லாம் செய்யும்
என்றால்
தங்கம் ஜொலிக்கும்
தங்கம் மின்னும்
தங்கம் டாலடிக்கும்
என்பார்கள் .....
என்னிடம்
தங்கம் என்னவெல்லாம்
செய்யும் என்றால்
தங்கம் புன்னகைக்கும்
தங்கம் சிரிக்கும்
தங்கம் வெட்கப்படும்
என்பேன் .......!

====================

தூயதங்கம்
மிருதுவாகத்தான்
இருக்குமாம் .....
மிருதுவாகத்தான்
இருக்கிறது !

====================

பரிட்சையில்
ஒரு கேள்விக்கு
இப்படி
பதில் எழுதினேன் .......

" பட்டாம்பூச்சிக் கண்கள்
எடுப்பான நாசி
குட்டி உதடுகள்
சங்குக் கழுத்து
.......................
இல்லாத இடை
பொல்லாத நடை ! "

கேள்வி இதுதான் ....
கோலார்
தங்கச்சுரங்கத்தைப்
பற்றி சிறுகுறிப்பு வரைக .....

====================

இன்று
அட்சையதிருதியை ....
தங்கம்
அணியவேண்டுமாம் .....
உன்னை
உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு
நாளெல்லாம்
சுற்றிவருகிறேன் ......
நாளெல்லாம்
தங்கம் அணிந்திருந்த
பாக்கியம் கிட்டட்டும் !

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (21-Apr-15, 9:03 am)
Tanglish : thanga mangaiye
பார்வை : 547

மேலே