தளிர்மேனி யாள்வாழ்க வே - இரு விகற்ப நேரிசை வெண்பா
நாற்பத்து மூன்று பிராயமே ஆனாலும்
ஏற்கெனவே பிள்ளை இருவரைப் - போற்றி
வளர்த்தாலும் மாதுரி தீட்சித் அழகுத்
தளிர்மேனி யாள்வாழ்க வே! 1
நாற்பத்து மூன்று பிராயமே ஆனாலும்
ஏற்கெனவே பிள்ளை இருவரைப் - போற்றி
வளர்த்தாலும் மாதுரி தீட்சித் அழகுத்
தளிர்பெண்ணாள் வாழ்க மகிழ்ந்து! 2
மகிழ்ந்து, நெகிழ்ந்து, பணிந்து, துணிந்து, இனிது - பிறப்பு என்னும் வாய்பாடு.
குறிப்பு:
அமெரிக்காவில் இருந்த நடிகை மாதுரி தீட்சித் தற்போது குடும்பத்துடன் மும்பைக்கே வந்து செட்டிலாகிவிட்டார். நான் எனது சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறேன்.
நடனமாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், அதி்ல் ஆத்ம திருப்தி கிடைக்கும். நான் நடனப் பயிற்சி மேற்கொள்கிறேன். முதுமையைப் பார்த்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை அது இயற்கை தானே என்கிறார் நடிகை மாதுரி தீட்சித்.