தவறான விடை
தப்புக்குறி
போட்டிருக்கிறார்
ஆசிரியர்.
ஒரு மதிப்பெண்ணில்
சதம் தவறியதால்
காதைத் திருகினாள்
அம்மா.
சிறப்பு வகுப்புச்
செலவுகள் வீண்
என கத்துகிறார் அப்பா
குரங்கு குரங்கு என
நூறுமுறை எழுதும்
தண்டனையால் மட்டுமே
அழுகிறான் சிறுபிள்ளை.
கோடிட்ட இடத்தை நிரப்பாமல்
மனிதனை கடவுள் படைத்தார்
என்று எழுதியது தவறான விடை.
--கனா காண்பவன்