செருக்கு

மெல்லக்கடலாறு கலக்க
வெல்லவுடலேறு என நினைக்க
வள்ளத்திருக்க வெள்ளப்பெருக்கெடுக்க
உள்ள்ச்செருக்கடங்குதே!

கவின் கவி புவி கவியக்குவித்து
கவிமனம் தன்மானம் மாவிமானம்
எனக்குறித்து
செருக்கை சிந்தையில் பொறித்து
மரித்தவனை மறித்து கேள் செருக்கு
குறித்து அடங்கும் செருக்கு

வராலாறு புரளாது ஞாலமேழு
ஆளாது என் வாழ்வு வீழாது
என எவரெவர் மமதை மனதை பெருக்க
முனைந்வரோ
ஆண்டாண்டு மாண்டார் சரிதம் கேள்
அடங்கும் செருக்கு

வேதம் கல்லு
அடக்கமுடையார்க்கும்
அடக்கமிலாருக்கும் பேதமென்ன?
யாதெனச்சொல்லு?
அடங்கும் செருக்கு உனக்கு

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (23-Apr-15, 6:27 am)
Tanglish : seruku
பார்வை : 138

புதிய படைப்புகள்

மேலே