விசித்திர வாழ்க்கை

வலிகளின் வீரியம்
உணர்ந்தால் தான்
புன்னகையின் பூரிப்பை
உணர முடியுமென
இறைவன் நினைத்தது
ஏனோ

சிரிக்கும் இதழ்களுக்கு
கொஞ்சம் ஓய்வு
கொடுக்கவே தொடர்ந்து
அனுப்பி வைக்கிறான்
தொல்லைதரும் கஷ்டங்களை

சிரிப்பும் அழுகையுமாய்
சக்கரமாய் சுழன்று
செல்லும் இந்த
வாழ்க்கை எங்கு
போய் நிற்குமோ

எதை தேடி
அலைகிறோம் என
தெரியாமலே வெகுவேகமாய்
ஓட்டமெடுக்க தொடங்குது
என் கால்கள்

விசித்திரம்தான் இந்த
வாழ்க்கை
ஆனாலும் ஓடிக்கொண்டும்
எதையோ தேடிக்கொண்டும்
நீளுது நாட்கள்
ஓடுது காலங்கள்
கரையுது ஆயுள்


முடியுது ஓட்டம்
ஒரு நாள்
வெகுஅயர்வாய் சாய்கிறது
அந்த உடல்

என்னெனவோ செய்திருக்கலாமென
ஏக்க பார்வையோடு
மூடுது விழிகள்

எங்கு செல்லப்போகிறோம்
என தெரியாமலே
நிற்கிறது மூச்சு

விருப்பம் இல்லாமலே
விசித்திர உலகைவிட்டு
விடை பெறுகிறது
அந்த உயிர்

எழுதியவர் : யாழினி வ (26-Apr-15, 10:28 pm)
பார்வை : 103

மேலே