அம்மாவும், மனைவியும்

அரைக்குடம் தண்ணீராய் இருந்தாலும்
அவள் பெற்ற பெண்பிள்ளை அழகாய்
இடுப்பில் தூக்கி வரும்போது
என் மகளைப்போல வருமா
ஏற்றி வைத்துதான் கூறிவிடுகிறாள்
என் அம்மா, இருந்தாலும் நானோ
அடுப்பங்கறை வரைக்கும் அவளுக்காய்
அதிக செலவு செய்து குழாயமைத்து
அவள் நினைக்கும்போதெல்லாம் தண்ணீர்
அங்கேயே கொண்டு சென்று கொடுத்தாலும்
அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்னை
ஆயினும் திருமணத்திற்கு பின்னும்
அவளுடனே இருக்க விருப்பம்
இதற்கு என்மனைவி மறுத்தாலும்
இப்படிதான் கூறுவேன் நீயும் வருங்காலதாயே
இரண்டு பெண்களிடமும் என்னால் ஒத்து போகமுடியும்
என்னை ஒத்து போய்விடுங்கள் இதோ கூறிவிடுகிறேன்


எழுதியவர் : . '.கவி (5-May-11, 3:14 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 543

மேலே