நாடோடியோடு நவிழ்ந்த காதல்

காற்றோடு நானும் கவி பேசி நின்றேன்..
என் வாய்மொழிக்கு செவி சாய்க்கும் அந்த நெடுந்தூரச் சிதறல்..

என் வழி செல்லும் வாழ்வை நாங்கள் கதையாய் பேசி கழிப்போம்

எங்கள் வறுமையை நாங்கள் நாளும் பேசி சிரிப்போம்

தான் படரந்து வந்த பாதைகளின் வண்ணம் பல என் செவியில் ஊற்றுவான்...

என்னை போலொரு சுதந்திரம் கொள்வாயோ? என்றே கேலி செய்வான்

அங்கே ஓடுவான்...
சற்று நின்று என்னை தாண்டி சென்று நின்று கூச்சல இடுவான்

இடை,இடை என் கண்ணம் அறைவான்...

இரவினில் தலை சாய்வேன்.. நான் இதம் கொள்ள குளிராய் திரிவான்...

என் நெருங்கிய தோழனவன்..

அவன் என்னுள் வராத பொழுது,
நெஞ்சடைத்தே இறப்பேன்

எழுதியவர் : சிவசங்கர்.சி (30-Apr-15, 4:11 pm)
பார்வை : 167

மேலே