மனிதம் செழிக்கும் பழமொழி கவிதைகள் - பாகம் -1
![](https://eluthu.com/images/loading.gif)
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்!
விதைக்கும் நல்லெண்ணங்கள்
நன்னடத்தையாய் விளையும்!
விதைத்த விதைகள்
விருட்சமாய் வளரும்!
விருட்சம் வளர்க்க
விதைத்த எண்ணங்கள்
உயர்ந்த மனிதனை உருவாக்கும்!
இன்றைய பூமி
மரங்களால் நிறைந்து
தோப்பாய் உயரும் போது
நட்ட பிஞ்சுகள்
நன்றாய் வளர்ந்து
நல் சமூகத்தை உருவாக்கும்!
இயற்கையோடு இயையும் போது
மனதில் நல்லெண்ண அலைகள் வீசும்!
மன அழுத்தங்கள் கூட அகன்றிடும்!
மனிதம் முன்னேறி மண்ணும் செழிக்கும்!