நானும் என்னவனும்
//கம்பனும் தோற்றுப் போவான்
காத்திருக்கும்
என் காதலை கவி வடிவில்
வடித்திட முடியாமல் //
//கதிரவனும் கண்கள் மூடுவான்
என்னவனின்
விழி அசைவின் ஒளியை
எதிர்கொள்ள முடியாமல் //
//சிலை செதுக்கும் சிற்பி
சினத்துக்கொள்வான்
பிரம்மனால் மட்டுமே செதுக்க முடிந்த சிற்பம் இவள் என்று //
அவன்
//கன்னக்குழியில் கவிழ்ந்து போயின
கரைசேர முடியாத
என் மனக்கப்பல் //