மௌனக் கலைப்பு

மொட்டின் மெளனக் கலைப்பு
மலரின் பருவமோ?

மலரின் மெளனக் கலைப்பு
உயிர் உருவச் சிலையோ?

சிலையின் மெளனக் கலைப்பு
கலையதன் தலையழகோ?

அழகின் மெளனக்கலைப்பு
மலர்ந்து விரியும் இதழ்களோ?

இதழ்களின் மெளனக் கலைப்பு
பூ பூக்கும் புன்னகையோ??

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (5-May-15, 12:50 pm)
பார்வை : 72

மேலே