திருட்டுப் பூனை----அஹமது அலி----

திருட்டுப் பூனை----அஹமது அலி----

காவலிருந்த
களவானிப் பூனைகளை
கள்ளப் பேச்சின்
சாமர்த்தியத்தால்
துரத்தி விட்டு
காவல் பொறுப்பை
கருப்புப் பூனை ஏற்றது...
-
-
சட்டிப் பாலையும்
மீதமின்றி குடித்த நிமிர்ந்து
சுற்றும் முற்றும்
உற்றுப் பார்த்தது
-
-
மீசையில் ஒட்டிய
பாலடையை
நாக்கில் துலாவி
வாய்க்குள்
வசப்படுத்தியது....
-
-
பாலிருந்த
சுவடு தெரியாமல்
நக்கி முடித்து
நகர்ந்து சென்றது..
-
-
அறையின்
மூலையொன்றில்
அப்பாவியாய் பாவனை செய்து
படுத்தும் கொண்டது..
-
-
ஓரப் பார்வையால்
நோட்டம் விட்டே
கண்கள் மூடி
கனவும் கண்டது..
-
-
பொய் ஊழல் திருட்டு
எல்லாப் பாவங்களுக்கும்
எங்கேயோ தண்டனை
வழங்கப்பட்டது..
-
-
அதிர்ச்சியில்
விழித்த பூனை
தூர்தர்ஷனில் நேரலையாக
பாராளுமன்ற கூட்டத்தொடர்
பார்த்துக் கொண்டிருந்தது...

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (6-May-15, 8:07 am)
பார்வை : 232

மேலே