தீர்த்த கரையிலினிலே
மது
மண் புழுவின் குணத்தை மனித சாதிக்கு அர்த்த படுத்திய அமிர்த திராவகம்...
மனிதமானவர்களை மந்தையாய் திரிய,
எங்கள் வர்கங்களை சொர்பங்களாக்க விதிக்க பட்ட மாந்ரீக தீர்த்தம்
விந்தை விந்தை
விஷமென்றறிந்தும் விலை போட்டு விற்பார்
விந்தை விந்தை
குணம் கெட்டோர் கேட்டு வாங்க மறந்ததில்லே...
குடித்தவன் மர்ம மயக்கத்திலே மார்தட்டி திரிவான்...
கட்டியவளும்,
கட்டியவள் பெற்றவளும்
நொழிந்த வயிற்றை தட்டியே வீழ்வார்...
அது அமிர்தமல்லடா பாவி,
அது அமிலம்...
மண்ணில் தைந்தாலே பிழைக்க நாள் படும்...
மெல்லிய திசு?
கிடைத்த நாள் ஒன்றில் ஊர் ஓரம் போவாய்...
எஞ்சிய நாளில் இவர் ஈர சொடுக்கிட்டே வாழ்வார்...
இன்னும் உன் செறுக்கு ஓயலே ...
உனக்கு விற்பவன் செறுக்கு மாயலே...
ஈன செவி திருப்பி கேள்
நீ கழிந்தால் பூமி கவிழாது...
உனக்குற்றவர்கள் வறுமையின் சாக்கில் பிடி படலாகாது..
இம் மர்மத்தை தெளித்தவன் எவன்?
எங்கள் மான்பை குலைத்தவன் எவன்?
அவன் நின்ற இடமெல்லாம் தீ பிடித்து எரியட்டும்..
அவன் குலம் தழைக்காமல் ஒழியட்டும்...!