பிறந்த மண்

ஆகாய மேகங்கள் கூர்ந்து என்னை பார்க்கும்
எங்கு வெகுநாள் காணோம் என்று கேட்கும்
புல்வெளியில் பாத ஸ்பரிசம் ஜீவனில் உரசும்
மனது பலபல சுகமான உணர்வுகளை அலசும்
அயல்நாட்டிலோ உள்நாட்டிலோ பிழைப்புக்காக
குடிபெயரும் யாவர்க்கும் பிறந்த மண்ணில்தான்
உடலும் உயிரும் பின்னி பிணைந்து உணர்வுகளும்
உறவுகளும் கலந்து முழுமை அனுபவம் கிடைக்கும்

எழுதியவர் : கார்முகில் (20-May-15, 8:57 pm)
Tanglish : pirantha man
பார்வை : 280

மேலே