வாழ்த்துகள்
இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட மணமோ - இல்லை
சொப்பனத்தில் நிச்சயிக்கப்பட்ட மணம் இதுவோ
பூலோகத்தில் அரங்கேறிய அழகிய திருமணமோ - இல்லை
போராட்டத்தில் பொறுமையாக நடந்தேறிய போர் மணம் இதுவோ
எது எதுவாக ஆனாலும் எல்லாம் நன்றாக ஆனதே ............
ஏழுஎழு பிறவிக்கும் தொடரும் பந்தம் இதுவோ - இல்லை
தொடர்ந்துக் கொண்டே இருக்கப் போகும் பந்தமும் இதுவோ
நீவிர் இருவரும் பெற்ற ஆசீர்வாதம் - போல்
பதினாறு செல்வத்தை பெற்றிரோ இல்லையோ
வாழ்க்கைக்கும் தீராத செல்வமாக - ஓர் இருபத்து
மூன்றுக்கு இணையான ஒரு மகனையும் - மூவாருக்கு
இணையான ஒரு மகளையும் பெற்று எடுத்தீரே.......
அழகிய குடும்பத்தையும் அமைத்தீரே - இன்று
ஐ ஐந்து திருமண நாளிலும் கால் பதித்தீரே ..........
இன்னும் இன்னும் நம் குடும்பம் செழுமையாக இருந்திடவே - அந்த
இறைவனும் நம்மை அருளிட மாட்டாரோ ........?
குறிப்பு : கடந்த 24/05/2015 அன்று என் பெற்றொருக்கு 25வது திருமணநாள்
அதற்காக நான் எழுதியது இந்த படைப்பு