புரட்சி வீரன்
உலகை வென்றிடத்தான்
உருவம் எடுத்தாயோ !
உளத்தைச் செதுக்கிடத்தான்
உளியாய் நின்றாயோ !
பாரதத்தின் ராஜா - உன்
பாதை எங்கிலும் ரோஜா
முட்கள் தைத்தாலும் - உன்
முறுவல் மாறாதே !
சகாயனே! சரித்திரம் படைத்திடு
சிரமம் உடைத்து சிகரம் தொட்டிடு
சிம்மாசனம் காத்திருப்பது உனக்காக
சிங்கமே! அதை அலங்கரிப்பாய் சிறப்பாக
தடை பல வந்தாலும்
படை பல தடுத்தாலும்
மடை திறந்த வெள்ளம் போல்
நடை போட்டு வருவாய்
நாடை நலம் பெறச் செய்வாய் !
கனவுகள் கண்டு காரியம் வென்று
காவியம் படைப்பாய் !
கவிநயம் கொண்டு கருத்துகள் தந்து
கவிதையாய் நிலைப்பாய் !
புவியாளப் பிறந்தவன் நீயே !
புது நீதி படைப்பாய்த் தீயே !
புரவி ஏறிய வீரன் போலே - நீ
புரட்சி செய்ய வந்தவன் தானே !
கண்ணன் வழி நடந்து
கனவுகளை அடைந்து
விண்ணை வெல்வாய் !
மண்ணை ஆள்வாய் !
-அரங்க ஸ்ரீஜா