தாயன்பு மாறாது

தாயன்பு மட்டும் மாறாது !
-------------------
இறைதேடும் கோழியுடன் இணைந்து
அலையும் கோழி குஞ்சு
இனையாக வளர்ந்தபின்
தாயன்பை தேடுவதுண்டோ ?

இம்பா வென கத்தும் பசுவின்
தாய்மை ஒலி கேட்டு
மடிகறக்க மடி சுரக்க ஒடி வரும் மழலை கன்று
மாடாக மாறியபின்
மறந்தும் கூட
தாய்பசுவின் தாய்மையை
நாடுவதுண்டோ ?

கிளியாக வளர்த்த பிள்ளை
அவள்
கிழவியாக விட்ட பின்னே
தாய்பாசம் தேடி வருவான்னேன
தாயே நீ எதிர்பார்த்தால்
அது உயிர்குலத்துக்கு
ஒவ்வாதது ஆகாதா ?

ஆறறிவு மனிதனாகட்டும்
ஐந்தறிவு மிருகமாகட்டும்
மாறாமல் இருக்கும் பாசம்
தாயே
நீ வைக்கும் நேசம் மட்டுமே !

எழுதியவர் : (27-May-15, 7:28 pm)
சேர்த்தது : m arun
Tanglish : THAYANBU maaraathu
பார்வை : 87

மேலே