KAVIYAM

ஆணாலே பெண்ணைக் கட்டி ஆள முடியாது
பெண்ணாலே ஆணைக் வாழ முடியாது
ஆனாலும் உலகத்திலே வாழும் வாழ்க்கை
எல்லாமே நாடகம்
உள்ளே குமுறும் எரிமலை மீது அமர்ந்தே
எழுதும் காவியம்

( ஆணாலே )

நான் முன்னால் செய்த பாவத்தின்
பயனாய்ப் பிறந்தேனா
இல்லை இந்நாள் செய்யும் பாவத்தின்
பயனாய்ப் பிறப்பேனா
பிறந்தாலும் துடிப்பே இல்லாத பிறப்பாய்
என்னைப் படைத்துவிடு
கண்ணும் காதும் நாவும் இல்லாத ஜென்மமாய்
என்னைப் படைத்துவிடு


பிறவியின் தொடரை அறுத்துவிடு இல்லை
துறவியின் நிலையை தரித்துவிடு.


*****

எழுதியவர் : மதுரோடு இளங்கோவன் (2-Jun-15, 9:03 pm)
சேர்த்தது : ILANGOVAN
பார்வை : 67

மேலே