பெண் காதலை முதலில் சொன்னால்
வரலாற்றில் எழுதுங்கள் என் பேரை
காதலை முதலில் சொன்ன பெண் என்று
என்ன உன்னிடம் பிடித்தது என்று கேட்காதே
என்னை ஏளனமாய் பார்க்காதே
என்னை விலை மதுவில் சேர்க்காதே
உணர்வு பூர்வமாய் சொல்கிறேன்
உன்னை காதலிக்கிறேன் என்று
நான் கொஞ்சம் வித்தியாசம் தான்
காதலை முதலில் சொல்வதில்