ராத்திரி தொலைத்தேனே
காட்டுல மேட்டுல உன்ன நான் பாக்கள - புதுசா.
காஸ்ட்யும் போட்டு நான் காதல சொல்லல
எப்படி விழுந்தேனோ என் இதயத்த தொலைதேனோ
கிட்டக்க எட்டக்க கூட பாக்கள
ஜங்குன்னு ஜக்குன்னு ஓட்டவும் தோனல
எதுக்கு பிறந்தேனோ நான் உனக்கென வந்தேனோ
மடைய தெறக்க பாக்குது தண்ணி
மறந்து போகுரன் உன்னையே எண்ணி
வீச மறுக்குற காத்துக்கு ஜண்ணி - நான்.
விழுந்து விழுந்து பாக்குற கன்னி
கிட்ட தட்ட கரையுற வயசு
கொக்கி போட்டு இழுக்குற காதல்
பேசி பேசி மடிக்கிற வார்த்தை
பாத்து பாத்து அலைகிற பார்வை
சைகை காட்டி தொலைகிற பாவம்(பாவனை)
நினைத்து நினைத்து மறைகிற படிவம்
இரவில் தூறும் கனவின் உச்சம்
பகலை தேடும் நினைவின் மிச்சம்
இவை யாவும் கடந்தேனே என் ராத்திரி(அவள்) தொலைத்தேனே.