இடம் அமர்ந்தாயே

இடம் அமர்ந்தாயே
இதயத்துள்ளும்
காதலை வீசுகிறேன்
கைநீட்டித் தொடுவாயோ
காந்த விழிகளுக்குள் - எனை
கைகட்டிப் போட்டவளே
காலை வரையும் அமர்ந்திடு
காதல் என்னும் சொல்லைச் சொல்லி
கண்ணிமையை உற்று நோக்கடி
காதல் தானடி பூத்திருக்குது,
பூவை உன் முகத்தில் மட்டும் தானடி
இப்புவியை நகர்த்தும் சக்தி உள்ளது
இன்னுமொரு புன்னகை
பூமியுடன் நானும் பூரிக்க…

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (6-Jun-15, 11:29 am)
பார்வை : 71

மேலே