சந்தோசம் கொல்லும் சந்தேகம்

..."""சந்தோசம் கொல்லும் சந்தேகம் ""...
சந்தோசத்தின் எதிரினான்
வஞ்சத்தின் கூட்டாளினான்
எனை நீ வேண்டாமென்றே
விலக்கியே வைத்தாலும்
உன் வீட்டிலேயே இருப்பேன் !!!
அழையாத விருந்தாளியாய்
என்னாலே பல குடும்பங்கள்
இல்லாமலே போனதுண்டு
சொல்பேச்சு கேட்கும் அன்பரின்
இரத்ததில் கலந்த போதைனான் !!!
ஆத்திரமூட்டி சண்டைசெய்து
ஓரமாய் வேடிக்கை பார்க்கும்
இது சர்க்கரை வியாதிபோல்
ஒருமுறை வந்துவிட்டால்
உயிருள்ளவரை குடியிருக்கும் !!!
மேன்மையானவர்களையும்
மென்மையானவர்களையும்
வாழையில் குத்தும் ஊசியாய்
மெல்லவே உயிரைப் பறிக்கும்
சந்தோசம் கொல்லும் சந்தேகம் !!!
விலகிவிடு இதை விட்டுவிடு
தொட்டுவிட கொன்றுவிடும்
தேகம் தொட்ட தூசியென்றே
அதனை தட்டிவிட்டு எட்டியே
நடைபோட்டு நீ சென்றுவிடு !!!
அன்புசெய் சுயமாய் சிந்தி
கோபம் குறை குணம் காட்டு
குறைகள் திருத்தி நிறைசெய்
விட்டுக்கொடு நீ தட்டிக்கொடு
சந்தேகம் உனைவிட்டு ஓடிவிடும் !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..