கலைந்த மேகம்
செழுத்து பருத்தது கார்மேகம்
பழுத்து அடர்ந்து சூழ்ந்தனவே
கருத்து வளைத்து வந்தனவே
கதிரவன் ஒளியை மறைத்தனவே
மங்கி இருளும் படர்ந்தனவே
மங்குல் சித்திரம் தீட்டிடவே
பொறிகலங்கின பறவைகளே
பதறிச் சென்றன கூட்டினிற்கே
நடமிடும் மாந்தர்கள் விரைந்தனவே
நல்கி இருந்திட கூரைக்கே
வெட்டி அடித்தது மின்னல்களே
வாட்டி இரைத்தது கொடுயிடியே
தாகம் தீர்த்திட வந்தனவே
என்று மண்ணும் எண்ணிடவே
தக்கை அடித்த பெருங்காற்று
தடையன கலைத்தது மேகத்தையே