ஆக்கம்

வயலை மாற்றி
பிளாட்டாக்கினான்
வனத்தை மாற்றி
கான்கிரீட் வீடாக்கினான்
நீரை உறிஞ்சி
கோலாவாக்கினான்
மணலைச் சுரண்டி
பாலைவனமாக்கினான்
புகையைக் கலந்து
காற்றை நஞ்சாக்கினான்
உரத்தை தெளித்து
நிலத்தை மலடாக்கினான்
இப்படி ஒவ்வன்றையும்
வேறொன்றாக
மாற்றிகொண்டே
போய்கொண்டிருக்கும்
அவன்
இறுதிவரை
மனிதனாக மட்டும்
மாறவே இல்லை.

எழுதியவர் : தர்மராஜ் (8-Jun-15, 12:01 am)
Tanglish : AAkkam
பார்வை : 112

மேலே